"கட்சி ஏஜெண்டுகளை போல ஆளுநர்கள் நடந்துகொள்கின்றனர்"- மு.க.ஸ்டாலின்

 
mkstalin mkstalin

தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் அரசின் உரையை படிக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

MKstalin

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “முதலில் தமிழ்நாடு, அடுத்து கேரளம், இப்போது கர்நாடகா. இதன் நோக்கம் தெளிவானது, வேண்டுமென்றே செய்வது. அரசுகள் தயாரித்தளிக்கும் உரையை ஆளுநர்கள் வாசிக்க மறுத்து, குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் போல நடந்துகொள்வது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயலாகும். நான் முன்பே தெரிவித்தபடி, சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே இதற்கான தீர்வாக அமையும்.

இந்தியா முழுவதும் இந்தக் கருத்தைக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாலோசித்து, வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்தப் பயனற்ற, நடைமுறைக்குப் பொருந்தாத வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் தி.மு.க. போராடும்” எனக் குறிப்பிட்டுள்ளாஅர்.