5 ஆண்டுகளில் 897.82 கோடி விடியல் பயணங்கள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 
mkstalin

விடியல் பயணத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 897.82 கோடி விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்தனது எக்ஸ்ளத்தில், “#விடியல்_பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து

#DravidianModel-இல்,

🚍 விடியல் பேருந்துகள் - 7,712

மார்ச் 1 வரையில்,

2021-22 - 95.86 கோடி
2022-23 - 166.53 கோடி
2023-24 - 186.35 கோடி
2024-25 - 213.94 கோடி
2025-26 - 235.14 கோடி

என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்கள் - 897.82 கோடி

பாதுகாப்பான, சுதந்திரமான பயணங்களால் மகளிர் முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்டியிருப்பதோடு, ஆண்டுக்கு ஆண்டு விடியல் பயணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவது இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. மகளிர் மட்டுமல்ல, திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.


🚍 இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் நாம் செயல்படுத்திய இந்தத் திட்டம், அடுத்தடுத்து எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது.

🚍 #DravidianModel 2.0-வில் இந்தத் திட்டம் இன்னும் மேன்மையடையும். இது #StalinStatement!” எனக் குறிப்பிட்டுள்ளார்.