“சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்!”- மு.க.ஸ்டாலின்

 
நரிக்குறவர் இன மக்களை சந்தித்து .. அவர்கள் வீட்டில் காலை உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்..

காலை உணவுத்திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாக செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

mks

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்!
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது #DravidianModel அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு மாண்புமிகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் விளக்கியுள்ளனர்.  இன்னும் ஒருபடி மேலே சொன்னால், #CMBreakfastScheme, #NaanMudhalvan, #PudhumaiPenn, #TamilPudhalvan போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் — #ElectionManifesto-வில் குறிப்பிடப்படாதவை!


முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்! ✅ Accessibility, ✅ Accountability, ✅ Transparency, ✅ Inclusivity, ✅ Responsibility, ✅ Sustainability இதுதான் தி.மு.க.!” எனக் குறிப்பிட்டுள்ளார்.