பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா?- மு.க.ஸ்டாலின்

 
TNHRCE - MK Stalin TNHRCE - MK Stalin

பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்தது, 100 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி வேலையை நிறுத்த திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Advertisement

null

null


இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம்!
#TamilNaduVsNDA எனும் இந்த ஜனநாயகப் போரில் #தமிழ்நாடு_தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!” எனக் குறிப்பிட்டுள்ளார்.