2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?- மு.க.ஸ்டாலின்

 
2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?- மு.க.ஸ்டாலின்

எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகள் குறித்தும், சாதனைகளால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? 🖤♥️ எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!


மறுபுறம்,சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்! தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.