தமிழ்நாடு சிறக்க எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்- மு.க.ஸ்டாலின்

 
MKstalin

சென்னை தலைமை செயலகத்தில் சென்னை உட்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும். இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  மழைக்காலம் தொடங்கப் போகிறது, ஏரி, குளம், குட்டை, கண்மாய்களை தூர்வாரி, குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டனடு ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்றதும் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களைச் செம்மைப்படுத்தும் ஆய்வுப் பணிகள் தொடங்கியது. உங்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நமது #DravidianModel ஆட்சியில் தொடர்ந்து இன்னும் பல புதிய திட்டங்களைக் கொண்டுவரவுள்ளோம். நமது எண்ணங்களோடு, மாவட்ட ஆட்சியர்களின் உள்ளீடுகளையும் பெற்றுக் கொண்டோம். தமிழ்நாடு சிறக்க எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.