"காலை உணவுத் திட்டம் நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம்" - மு.க.ஸ்டாலின்

 
MK stalin letter MK stalin letter

அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை சாப்பிட்டதுடன், அதுகுறித்த கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்ததாக குறிப்பிட்டார்.

Image

இந்த பதிவை மேற்கோள்காட்டி பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும்,  மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், "உங்கள் பகுதியில் #CMBreakfastScheme உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா?" என்று நான் கேட்பது வழக்கம்! அந்த வகையில், ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன். 


காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது!” என குறிப்பிட்டுள்ளார்.