வரவேண்டிய ஜல்ஜீவன், கல்வி நிதியும் பட்ஜெட்டில் இல்லை- மு.க.ஸ்டாலின்
அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கேட்டால், 5 ஆண்டுத்திட்டம் போல வாசித்திருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “#Budget2026: எப்படியும் தோல்வி உறுதி என்பதால் தமிழ்நாட்டை மீண்டும் புறக்கணித்த ஒன்றிய பா.ஜ.க. அரசு!தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களும் இல்லை; ஏற்கெனவே வரவேண்டிய #JalJeevan & கல்வி நிதியும் இல்லை; அட, வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் கூட இம்முறை இல்லை!அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கேட்டால், 5 ஆண்டுத்திட்டம் போல வாசித்திருக்கிறார்கள். மொத்தத்தில், #UnionBudget2026 ஏமாற்ற பட்ஜெட்! #NDABetraysTN
2026-27ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநில வரிவருவாய் பகிர்வை 50 விழுக்காடாக அதிகரிக்காமல் 41 விழுக்காடே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செலுத்திவரும் தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வு, இதர வளர்ச்சியடைந்த மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே அளிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கான ஒன்றிய வரிகளின் பங்கு சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்பதும் கண்டிக்கதக்கது. மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காததால் நிறுத்தி வைக்கப்பட்ட அனைவருக்குமான கல்வி திட்டத்திற்கான ரூ.3548 கோடி, ஜல் ஜீவன் திட்டத்தில் விடுவிக்காத ரூ.3,112 குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. நிதிநிலை அறிக்கையில் திருக்குறளும் இந்த முறை இடம் பெறவில்லை. தமிழ்நாட்டிற்கான எந்த முக்கியத் திட்டங்களும் இடம்பெறவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


