“QUIT SIR நெருப்புடன் விளையாடாதீர்கள்.. தமிழ்நாடு முழு வீச்சில் போராடும்”- மு.க.ஸ்டாலின்

 
mkstalin mkstalin

பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிடுமாறு ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Image

பீகாரில் நடைபெறும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மற்றும் ரேஷன் அட்டை ஆகியவற்றை தனித்தனி ஆவணங்களாக ஏற்க மறுத்து பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ் உள்ளிட்ட 11 குறிப்பிட்ட ஆவணங்களை மட்டுமே அனுமதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (S.I.R) உடனடியாக கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தங்களுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய மக்களை வாக்களிக்கவே விடாமல் தடுத்து, பாஜகவுக்கு சாதகமாக களத்தை மாற்றப் பார்க்கிறார்கள். எங்களை வீழ்த்த முடியவில்லை என்பதால், நீக்க முயற்சிக்கிறீர்கள். இது ஒற்றை மாநிலத்தை பற்றியது மட்டுமல்ல இந்திய குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது நெருப்புடன் விளையாடாதீர்கள். முழு வீச்சில் இதற்கு எதிராக தமிழ்நாடு போராடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.