அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்... அநீதிக்கு எதிரான வெற்றி: மு.க.ஸ்டாலின்

 
mkstalin

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

New Delhi: Delhi Chief Minister Arvind Kejriwal with Tamil Nadu Chief  Minister MK Stalin #Gallery

அமலாக்கத் துறையால் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த  டெல்லி மாநில முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவாலை  உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு  பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் களத்தில் பரப்புரை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாண்புமிகு டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான திரு. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது மக்களாட்சியை வலிமைப்படுத்தியுள்ளது.


திரு. அரவிந்த் ஜெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் வேகத்தை இது கூட்டியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.