உள்நாட்டுப் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது- மு.க.ஸ்டாலின்

 
MK stalin letter MK stalin letter

உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது  நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

mk stalin write a letter to jaishankar about fishermen arrest


பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படைப்பிரிவு. கைது நடவடிக்கைக்கு பிறகு அபுபக்கர் சித்திக் தங்கி இருந்த வீட்டில் ஆந்திர காவல்துறை நடத்திய சோதனையில் வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நமது #DravidianModel அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், #AntiTerrorismSquad புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது  நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினருக்கும் எமது நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.