கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin mkstalin

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - ஜூலை 15 பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

tn

மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது . மேலும் 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.கலைஞர்  நூற்றாண்டு விழாவை ஒட்டி ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு  நூலகத்தை திறந்து வைக்க உள்ளார். பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில்  2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகம் கன்னியாகுமரியில் தொடங்கி தென் மாவட்டங்கள் முழுவதில் இருந்தும்  மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

Image

8 தளங்களில்  நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள  கலைஞர் நினைவு நூலகத்தில்,  அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடம், தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.

Image

இந்நிலையில் கலைஞர் நூலகம் திறப்பு குறித்து டிவிட்டடரில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன். #கலைஞர்100-இல் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும்! மக்களுக்கு என்றென்றும் பயன் தரும்! கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.