கடலூர் சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

TN CM MK Stalin discharged from Apollo Hospitals after routine check-up |  Mint

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், மோவூர் மேற்கு கிராமம், பிரதான சாலையில் நேற்று (2-9-2023) இரவு முட்டம் கிராமத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், காட்டுமன்னார்கோயிலில் இருந்து சென்ற நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் கடலூர் மாவட்டம், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த திரு.சக்திவேல், த/பெ. மகேந்திரன் (வயது 25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

 உயிரிழந்த திரு.சக்திவேல் அவர்களின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திரு. அஜித் மற்றும் திரு.சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்திரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளக்