நீட் தேர்வை முதலில் எதிர்த்தது திமுக தான்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

நீட் ஆபத்தை முதலில் முன்னறிவித்து அதற்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது திமுக தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு

நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

mkstalin

இந்நிலையில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று கூறிய நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை 7 மொழிகளில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் தரப்பில் அதிக காலதாமதத்திற்கு பிறகு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தோம். நீட் தேர்வு முரண்பாடுகளால் நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம். தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.