குவைத்தில் புகை காரணமாக மூச்சுத்திணறி பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tamil Nadu - CM MK Stalin with a new move targeting Hindu religion,  proposes reservation and benefits for converts to Islam - VSK Bharat

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தைச் முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 19ஆம் தேதியன்று காலையில் தங்கியிருந்த அறையில் கடும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தீ மூட்டியதாகவும்,  தீயை அணைக்காமல் அப்படியே உறங்கியதால் நெருப்பு அணைந்து ஏற்பட்ட புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர். இருவரின் உடல்களும் கடந்த 22ஆம் தேதி குவைத் நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.