"Uncle விஜய் அவர்களே முதலமைச்சர் பொறுப்பு 10 - 5 ஆஃபீஸ் வேலை இல்லை"- மு. க. ஸ்டாலின்
கோவையில் திராவிடர் கழகம் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மு. க. ஸ்டாலின், "என்னால் மறக்க முடியாத சாதனை, பெரியார் அறிவுலகம்.. தமிழகத்தின் அடையாளமான கோவை பெரியார் அறிவுலகம் பணி திமுக ஆட்சியில் 99 சதவீதம் நிறைவு பெற்றது. முதல்வர் வேலை ஒன்றும் 10-5 வேலை அல்ல, தவெக ஆட்சியின் அவலங்களை மறைக்க அடிக்கடி ரெய்டு நடத்தப்படுகிறது. திமுக பின் வாங்கிய வரலாறே இல்லை. அழுத்த அழுத்த மேலே எழுவோம். அதுதான் திமுகவின் டி. என். ஏ. விஜய் ஊடகங்களை பார்த்து பயந்து ஓடுகிறார். முதல்வர் பேச வேண்டும் என்பதற்காக மாதம் ஒருமுறை இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா? முதல்வருக்கு சாய்சே இல்லை, பதில் சொல்லியே ஆக வேண்டும். தவெக ஆட்சிக்கு வந்ததும் மின் வெட்டு பிரச்னை வந்தது, தற்போதுவரை அவர்களால் சரிசெய்ய முடியவில்லை.
நாங்கள் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிப்பாதே பெரியார்தான். அவரது கொள்கையை காப்பவர் வீரமணி. இந்த ஆட்சியில் அனைத்தையும் ஜோசியர் தான் முடிவு செய்கிறார். தற்போது சிறுமிகள் காணாமலபோவது தொடர்கதையாகிறது. தவெகவினரே போதைப்பொருள் விற்பனையில் சிக்குகின்றனர். தமிழக பொருளாதாரம் 5 மாதங்களில் தரைமட்டமானது. தவெக ஆட்சியில் சிறை கைதிகள் தப்பியோடுகின்றனர், 6 மாதங்களிலேயே மக்களின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துவிட்டனர். தொழில் நகரமான கோவையில் ஒரே மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளன. மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே, Uncle விஜய் அவர்களே, முதலமைச்சர் பொறுப்பு 10 - 5 ஆஃபீஸ் வேலை இல்லை; அதற்காக ஒட்டுமொத்தமாக தன்னை ஒப்படைத்துக்கொண்டு வாழ வேண்டும்; இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் போல கால் ஷீட்டிற்கு போய் வரும் வேலை கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் " என்றார்.

