”திராவிட மாடல் ரிசல்ட் கொடுக்கக் கூடிய மாடல்”- மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் என்பது வளர்ச்சிக்கான மாடல், ரிசல்ட் கொடுக்கக் கூடிய மாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்பது வளர்ச்சிக்கான மாடல், ரிசல்ட் கொடுக்கக் கூடிய மாடல், மக்களுக்கு நன்மை கொடுக்கக் கூடிய மாடல்; இதையெல்லாம் உலகிற்கு எடுத்துச் செல்லக் கூடிய மாநாடுதான், இந்த செயலாக்க மாநாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்கு, எங்களின் செயலின் மூலம் பதில் சொல்லும் மாநாடுதான் இந்த செயலாக்க மாநாடு. தொழில்துறை அமைச்சர் இங்கு சொன்ன ஒவ்வொரு டேட்டாவும் எங்களை விமர்சித்தவர்களுக்கான பதில். அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்கள் அணி கடந்த 5 ஆண்டாக செய்த உழைப்புக்கான நம்பர்”
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும். சமூக நீதி மற்றும் தொழில் வளர்ச்சி என்ற நோக்கில் செயல்படுகிறோம்.தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கையான மாநிலம் தமிழ்நாடு. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. நாங்கள் மட்டும்தான் இங்கு காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியல் செய்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் ஒப்பந்தம் போட்ட குறுகிய காலத்திலேயே தொழில் நிறுவனங்கள் எப்படி செயல்பாட்டுக்கு வருகிறது என பலரும் கேட்கின்றனர். ஒருங்கிணைத்து பணிகளைச் செயல்படுத்தக் கூடிய அணி, மனித வளம், நிலம் என அனைத்து அம்சங்களும் இங்கே இருக்கின்றன” என்றார்.

