"டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என்று பாஜக நினைக்கிறது"- மு.க.ஸ்டாலின்

 
MKstalin MKstalin

பெண்கள் கேட்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

தஞ்சையில் நடைபெற்ற டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெண்கள் கேட்காமலேயே, அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. பல்லடத்தில் தீபமாய் ஒளிர்ந்த வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு.. இன்று தஞ்சையில் தகத் தகவென மிண்ணுகிறது. பெண்கள்தான் எப்போதும் பவர் ஹவுஸாக இருக்கிறார்கள். திராவிட மாடல் அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று பெண்கள் எடுத்துரைக்க வேண்டும். தேர்தல் பரப்புரையின் முன்கள வீராங்கனைகளாக மகளிரணியினர் இருக்க வேண்டும். எதிரணியின் பொய் பிரச்சாரங்களை பெண்கள்தான் முறியடிக்க முடியும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூச்சமில்லாமல் பொய் பேசிவிட்டு சென்றுள்ளார் பிரதமர் மோடி. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான். பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் 7 நகரங்கள் இருந்தன.

அதிமுக ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் ப்ராக்சி ஆட்சி நடந்ததையே தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை. வெளிப்படையாக என்.டி.ஏ ஆட்சி என்று கூறுவதை ஏற்றுக்கொள்வார்களா? தோற்றுப்போன கூட்டணியை புதுப்பித்துவிட்டு பில்டப் கொடுத்துள்ளனர்.  அதிமுக- பாஜக கூட்டணி மிரட்டலால் உருட்டலால் வந்த பிளாக்மெயில் கூட்டணி. 2019,2021 தேர்தல்களில் ஒன்றாக இருந்து தோற்றுப்போனார்கள். 2024ல் தனியாக நின்று தோற்றனர். டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என்று பாஜக நினைக்கிறது” என்றார்.