மாணவிகளுக்கு படிப்புக்கு மட்டுமல்ல வேறு எந்த தடை வந்தாலும் உடைப்பேன்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி வருகை தந்த முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று நீயோ டைட்டில் பார்க் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர், இன்று தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள காமராஜர் கல்லூரியில் வைத்து அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து கல்லூரிக்கு சென்ற மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டத்தை 75 ஆயிரத்து 28 மாணவர்களுக்கு அதற்கான ஆணையை வழங்கி துவங்கி வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மகள்களே... நம்மை சாதி மதம் என பிரிக்க நினைக்கும் நபர்களிடமிருந்து வளர்ச்சியை பற்றி யோசிக்காமல் வன்முறை எண்ணத்தை தூண்டி விடக்கூடிய வன்மம் பிடித்த ஸ்டாக், பெண்கள் எல்லோரும் வீட்டில் தான் இருக்க வேண்டும் பெண்கள் ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்ற மன நிலையை இந்த காலத்திலும் பேசிக்கொண்டு திரிகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து இன்று தமிழ்நாட்டுப் பெண்கள் இந்தியாவிலேயே டாப்பாக இருக்கிறார்கள். மார்க் வாங்குவதில் தமிழக பெண்கள் டாப், நாட்டிலேயே உயர் கல்வியில் அதிகமாக சேர்வதிலும் தமிழகப் பெண்கள்தான் டாப், அப்படி உயர் கல்வியை முடித்து வேலைக்கு போவதிலும் இந்தியாவிலேயே நமது தமிழக பெண்கள் தான் டாப் என முதல்வர் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றி பேசிய முதலமைச்சர். இந்தியாவிலேயே மருத்துவ கல்வியில் நம்பர் 1-வது தமிழகம் இருக்கிறது.

பெண்களுக்கு நேரடியாக பணத்தை கொண்டு சேர்த்து உங்களுக்கு உதவி செய்து வருகிறது திராவிட ஆட்சி. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் எண்ணற்ற மகளிர் திட்டங்களை இன்று நிறைவேற்றி வருகிறோம், இந்த வரிசையில் தான் புதுமைப்பெண் திட்டத்தையும் உருவாக்கினோம். 2021 தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத திட்டம் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தேவை உள்ள திட்டம். மேல்படிப்பு படிக்க மனதில் இருந்தாலும் பணம் இல்லாமல் படிக்காமல் விட்டுவிடுகிறார்கள் அப்போதுதான் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கப்பட்டது. அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த திட்டம் துவங்கப்பட்டது. 

Image


மாணவிகளுக்கு படிப்புக்கு மட்டுமல்ல வேறு எந்த தடை வந்தாலும் உடைப்பேன். தமிழகத்தை தேடி உலக முன்னணி நிறுவனங்கள் தொழில் துவங்க வருவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும், குழந்தை திருமணம் குறையும், பெண் அங்கீகாரம் பெறுவார்கள், பெண்கள் படிப்பால் அவர்கள் தலைமுறையே காக்கப்படும். இந்த ஒரு திட்டத்தால் இத்தனை கிடைக்கிறது... உயர்கல்வி படிக்காத பெண்களே இந்த மாநிலத்தில் இல்லை என சூழ்நிலை உருவாக்காமல் நான் ஓய மாட்டேன்” என்றார்.