“அனைவரையும் வாழ வைக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்”- மு.க.ஸ்டாலின்

 
x x

ஒருபோதும் போலிப் பெருமைகளை பேசி தேங்கிவிட மாட்டோம் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பின் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒருபோதும் போலிப் பெருமைகளை பேசி தேங்கிவிட மாட்டோம். மாணவர்களாகிய உங்களைப் பார்க்கும்போது எனக்கு புதிய Vibe வந்துள்ளது. எதிர்காலமே உங்கள் கையில் தான் உள்ளது, உலகம் உங்கள் கையில் என்பது வெறும் தலைப்பல்ல உண்மை. ஒட்டுமொத்த உலகத்தையும் மாணவர்களின் கையில் கொடுக்கவே மடிக்கணினி வழங்கியுள்ளோம். கடந்த கால பெருமைகளை பேசுவதோடு எதிர்கால பெருமைகளுக்காக உழைப்போம். 100 அல்ல 1,000 அல்ல 20 லட்சம்  மடிக்கணினைகளை மாணவர்களுக்கு நாங்கள்  கொடுக்கப்போகிறோம். உலகத்தை உங்கள் கையில் இன்று கொடுத்து இருக்கிறோம்.  இதுதான் திராவிட மாடல்.  உலக பத்திரிக்கைகள் பாராட்டும் சூப்பர் ஸ்டார் மாநிலம் தமிழ்நாடு.

அறிவுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கம் திராவிட இயக்கம். தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாம் தொடர்ந்து கற்று கொண்டே இருக்க வேண்டும்.  மாணவர்களுக்கு காலம் கொடுத்துள்ள இரண்டாவது நெருப்புதான் ஏ.ஐ. அனைவரையும் வாழ வைக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். புத்தகங்களை தேடிச்செல்லும் காலம் போய் தற்போது மடிக்கணினி மூலம் உலகம் கையில் வந்துள்ளது. உங்கள் கைகளில் கொடுத்திருக்கும் மடிக்கணினி பரிசு பொருள் அல்ல. உலகத்தை நீங்கள் ஆள்வதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கும் வாய்ப்பு.” என்றார்.