திராவிட மாடல் அரசின் காலம் தான் காவல் துறையின் பொற்காலம்- மு.க.ஸ்டாலின்
திராவிட அரசின் ஆட்சிக்காலம் தான் காவல்துறையின் பொற்காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு காவல்துறையின் பொற்காலம் என்றுவாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 ஆயிரத்து 359 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 1000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கப்பட்டது.
காவல்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு 2599 நபர்களும், (ஆண்கள் - 1819 மற்றும் பெண்கள் – 780), சிறைத்துறை காவலர் பணியிடத்திற்கு 86 நபர்களும், (ஆண்கள்-83 மற்றும் பெண்கள்-3), தீயணைப்பாளர் பணியிடத்திற்கு 674 நபர்களும், என மொத்தம் 3359 நபர்களில், சென்னையில் வழங்கியது போக மீதமுள்ள 2359 நபர்களும், அவர்கள் சார்ந்த மாவட்டங்களில் பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், பணிநியமன ஆணைகளை பெற்று இன்ப துன்பங்களை துறந்து ஊண் உலகை மறந்து கடமை, கண்ணியம், கட்டுபாடு என்று பணியாற்ற வந்திருக்கும் காவலர்களுக்குவாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
காவல்துறை மேம்படுத்துவதற்கு காவல் ஆணையம் அமைத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. திராவிட மாடல் அரசின் காலம் தான் காவல் துறையின் பொற்காலம். காவலர்கள் சமூக நீதி பார்வையும், மதசார்பின்மையும் உங்களுக்கு முக்கியம், சாதி மதம் பார்க்காமல் கடமையாற்ற வேண்டும் என்றார்.
கஷ்டப்பட்டு வந்து இருக்ககூடிய நீங்கள் கஷ்டப்படும் மக்களை பாதுகாக்க வேண்டும். Duty கவனிக்கும் நீங்கள் உங்கள் உடல் நலத்திற்கும் மனதிற்கும் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தோடும் நேரம் செலவழியுங்கள் என்ற முதலமைச்சர், உயர் அதிகாரிளும் கடைநிலை காவலர்வரை ப்ரண்ட்லியாக இருங்கள் என்று அறிவுறித்தார். அதோடு குற்றங்களை தடுப்பதை விட குற்றங்கள் நடைபெறாமல் இருப்பது முக்கியம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ததீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை இயக்குநர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். .