பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்?- முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

 
ச்

உதகை விழாவில் பங்கேற்பதால் பாம்பனில் பிரதமர் மோடி பங்கேற்பும் விழாவிற்கு செல்லவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மலை மாவட்டமான நீலகிரி மக்கள் நீண்ட காலமாக அரசு மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவ மனை வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப உதகை அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் 499 கோடி நிதி ஒதுக்கபட்டு முதற்கட்டமாக அரசு மருத்துவ கல்லூரி 2022-ஆம் ஆண்டு திறக்கபட்ட நிலையில் 143 கோடி மதிப்பில் மருத்துவமனை, 200 கோடி மதிப்பில் மருத்துவமனை பணியாளர்களுக்கான குடியிருப்புகள், 10 கோடி மதிப்பிலான உபகரணங்கள் என மொத்தம் 353 கோடி மதிப்பில் மருத்துவ கல்லூரிக்கான மருத்துவமனை கட்டி முடிக்கபட்டுள்ளது. அதனை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “உதகை விழாவில் பங்கேற்பதால் பாம்பனில் பிரதமர் மோடி பங்கேற்பும் விழாவிற்கு செல்லவில்லை. பிரதமர் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். இந்தி திணிப்பு மற்றும் சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. வக்பு திருத்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி அவர்களே.. தமிழ்நாட்டு மண்ணில் நின்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் வாக்குறுதி அளிக்க வேண்டும். 

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். பொருளாதார வளர்ச்சியில் டாப் கியரில் தமிழ்நாடு செல்கிறது. பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உயர்க்கல்வி சேர்க்கை விகித்தில்  தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என்றார்.