சம்பிரதாயங்களால் ஆணுக்கு பெண் அடிமையாக்கப்பட்டனர்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

நாகர்கோவிலில் நடைபெற்ற தோள் சீலை போராட்டத்தின் 200-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். 

Image

அப்போது பேசிய அவர், “சமூக நீதி வரலாற்றில் முக்கியமானது தோள்சீலை போராட்டம். 80 வயதை கடந்த பெரியவர்களை கேட்டால்தான் இந்த தமிழ்ச்சமுதாயத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் தெரியும். இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால், தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது. மதம், சாதி, சாஸ்திர, சம்பிரதாய, புராணங்களின் பெயரால் ஆணுக்கு பெண் அடிமையென ஆக்கிவிட்டார்கள். சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு. வீரமிகு போராட்டத்தால், 1822ல் அடக்குமுறை ஒடுக்கப்பட்டதை இன்றைய இளைய சமூகத்திற்கு எடுத்துரைக்கவே இந்நிகழ்வு.

Image

திருவிதாங்கூரில் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் வேறு எங்கும் நடைபெறாதது. இடுப்பில் பெண்கள் தண்ணீர் கொண்டுவருவதற்கு தடை இருந்தது. இந்த தடையை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் அய்யா வைகுண்டர். அதேபோல் தோள்சீலை போராட்டத்துக்கு அய்யா வைகுண்டர் துணையாக இருந்தார். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களை தொட்டுவிட்டது. தமிழ் சமுதாயமானது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. ஆடை மட்டுமின்றி அணிகலன்களையும் அணிந்து வாழ்ந்துவந்ததுதான் நமது தமிழ் சமுதாயம்.

இன்றைய திராவிட மாடல் ஆட்சி உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாம் எல்லோரும் முன்னேற்றம் அடைவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை.அதனால்தான் எதிர்க்கிறார்கள். படிக்கவரும் பெண் பிள்ளைகளுக்கு ரூ.1,000 கொடுப்பதால் சிலர் பொறாமைப்பட்டு எதிர்க்கிறார்கள்.” எனக் கூறினார்.