'பாஜக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
 'பாஜக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட இந்தியா கூட்டணி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Mkstalin


மும்பை இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட இந்தியா கூட்டணி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது திருப்புமுனை கூட்டம். பாஜக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது. 19 கட்சிகளாஇ ஒன்றிணைத்து முதல் கூட்டத்தை பாட்னாவில் நடத்தினோம். ஒற்றுமையாக இருந்து பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என முதல் கூட்டத்தில் முடிவு செய்தோம். பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டினோம். மும்பையில் 28 கட்சிகளை ஒன்றிணைத்து வலிமைமிக்க கூட்டணி என்று நிரூபித்துள்ளோம்.' பாஜக அரசு எப்படி சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்.

9 ஆண்டுகளில் செய்ததை பட்டியலிட முடியாமால், இந்தியா கூட்டணி கட்சிகளைப் பற்றி வசைபாடி வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி. I.N.D.I.A கூட்டணி தற்போது நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதுவரை காணமுடியாத சர்வாதிகார ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் எதிரிகளை பழிவாங்க ED, CBI போன்றவற்றை பாஜக பயன்படுத்துகிறது. மிகப்பெரிய போர்க்களத்தில் ஈடுபடப் போகிறோம். அனைவரும் பக்க பலமாக நின்று இணைந்து துணை நிற்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. இந்திய கூட்டணியின் சிறந்த விளம்பரதாரர் மோடி” என்றார்.