”முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு” ஜப்பானில் முதல்வர் பேச்சு

 
ஜப்பான்

இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MoU with Japanese company in presence of Chief Minister M.K.Stalin |  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2024 ஆம் ஆண்டு ஜனவரி 10, 11 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஜப்பான் கூட்டாளர் நாடாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு ஜப்பான் முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கவே வந்துள்ளேன். இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் உள்ளது. எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து தங்கள் திட்டங்களை நிறுவியுள்ளது. பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்- ஜப்பான் வணிக மற்றும் தொழில் பேரவை ஆகிய நிறுவன ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும், ஒகேனக்கல் திட்டமாக இருந்தாலும் ஜப்பான்தான் அதற்கு உதவியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட 840 நிறுவனங்களில் 170 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டன. ஆசிய நாடுகளின் நுழைவு வாயிலாக சென்னை அமைந்துள்ளது என அப்போது ஜப்பான் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பான் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு நான் துணை முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு, ஜப்பான் தொழில்துறை கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் அலுவலகத்தை சென்னையில் ஜப்பான் அமைச்சர் திறந்துவைத்தார். ஜப்பான் நாட்டின் பொருளாதார வர்த்தக அமைச்சர், சென்னைக்கு வருகை தந்து தொழில்துறை கூட்டத்தில் பங்கேற்றார். இந்தியாவின் ஜப்பானும், ஆசியாவின் மிகப்பெரிய பழம்பெரும் ஜனநாயக நாடுகள். ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு நிதியை அதிகம் பெறும் நாடு இந்தியா தான். 4,250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.5,596 கோடியில் 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” என பேசினார்.