“இதைமட்டும் செய்தால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு”- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
ச்

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Image

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் சிந்து வெளி பண்பாட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த இந்திய தொல்லியல் கழகத்தின் மேனாள் இயக்குநர் சர் ஜான் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக சிந்துசமவெளி காளை மாதிரியின் உலோக சிற்பம் வழங்கப்பட்டது. சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கம் இன்று (ஜன.05) முதல் 7-ம் தேதி வரை என மொத்தம் 3 நாட்கள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிந்துவெளி எழுத்துமுறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழிவகையை, தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்  பரிசாக வழங்கப்படும். 2021 ஆட்சிக்கு வந்ததும் திராவிட மாடல் அரசு என்று பெயர் சூட்டினோம். திராவிட மாடல் அரசு, ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு. ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனை வரலாறு கூறினர். சிந்துவெளியில் இருந்த காளைகள் திராவிடத்தின் சின்னம். தாமிரபரணி நாகரீகம் 3,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்துள்ளோம்” என்றார்.