5,300 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது- மு.க.ஸ்டாலின்

 
ச்

தமிழ் நிலப்பரப்பில்  இருந்து தான் இருப்பின் காலம் தொடங்கியது என்றும் 5300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு அறிமுகமாயிருக்க வேண்டும் என்று உறுதியாகக்  கூறலாம் என்பதற்கான ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Image

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற விழாவில் 39 கோடி ரூபாய் செலவில் கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதோடு, கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்து இரும்பின் தொன்மை என்ற நூலையும் வெளியிட்டார். விழா அரங்கிற்கு வெளியே பல்வேறு அகழாய்வுகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் 2325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், இவ்விழாவில் 'இரும்பின் தொன்மை' என்ற நூலினை வெளியிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாப் பேருரை ஆற்றினார். 

Image
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலகுக்கே நான் அறிவிக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலகுக்கே நான் அறிவிக்கிறேன். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டஅகழாய்வுகளின் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை  கி.மு. 4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாயிருக்க வேண்டும் என்று உறுதியாகக்  கூறலாம். இதனை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன” என்று தெரிவித்தார்.