'திராவிடம் என்ற சொல் சிலருக்கு எரிச்சலை தருகிறது' - மு.க.ஸ்டாலின்

 
mkstalin

திராவிடம் என்ற சொல் பலருக்கு எரிச்சலை தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mkstalin

சென்னை கேரளா மீடியா அகாடமி சென்னை மலையாளி சங்கத்தின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடும், கேரளாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இந்தியாவிற்கு விடியலை தர வேண்டும். நாம் அனைவரும் திராவிட மொழி எனும் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை ஒன்றாக எதிர்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஊடகத்தினரை உருவாக்குவதில் மலையாள அகாடமி முக்கிய பங்காற்றுகிறது. தற்போது ஏராளமான பெண் பத்திரிக்கையாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். கருணாநிதிக்கு நெருக்கமானவர் பத்திரிகையாளர் அருண்ராம். இவ்விழாவில் பங்கேற்றதில் பெருமை. திராவிட மாடல் என்று கேட்டாலே பலருக்கு எரிச்சல் வருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை ஒன்று கூடி எதிர்க்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் என்னுடைய வேதம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றி எழுத முயற்சித்தால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும்” என்றார்.