“மக்கள் நலனை மருத்துவமனைகளில் நீங்கள் கவனியுங்கள்; உங்கள் நலனை இந்த அரசு பார்த்துக்கொள்ளும்”- மு.க.ஸ்டாலின்

எத்தனை தடைகள் நெருக்கடிகள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் பணியை மேற்கொண்டு வருகிறது அரசு தான் திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படட்டது. இதன் அடையாளமாக 15 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதை தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், “அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் உயர்ந்த இலட்சியம். எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் பணியை மேற்கொண்டு வருகிறது. திராவிட மாடல் அரசு இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் கலைஞர் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்பு தான் தமிழ்நாடு முன்னேறியிருப்பதற்கான மிக முக்கிய காரணம் என்றும் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன
தமிழ்நாட்டில் பெரிய நகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உயிர்காக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை என கலைஞர் உருவாக்கிய கட்டமைப்புதான் மருத்துவ சேவையில தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு சரியான முறையில் செயல்பட வேண்டும் என்றால் அதற்கு ஏற்றால்போல் மருத்துவர்களும் பணியாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய மக்களின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்களது மனநிலையையும் புரிந்து மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். கிராமங்களிலிருந்தும், சிறிய சிறிய நகரங்களிலிருந்தும் மருத்துவர்கள் உருவாகினால்தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும். முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவப் படிப்பு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்கிற மகத்தான திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார்.
கலைஞர் கொண்டுவந்த திட்டத்தால், கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் உருவாகியுள்ளனர். கலைஞர் வழியில் மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் பாராட்டும் வகையில் மேம்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நலனில் அக்கறை செலுத்தி அவர்களது வாழ்நாளை நீட்டிக்க செய்துள்ளது. இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48 திட்டம், பல உயிர்களைக் காப்பாற்றி அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நிம்மதியாக வாழ வைக்கிறது.தமிழ்நாடு முழுவதும் முதற்கடக்கான 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் மிகவும் மலிவான விலையில கிடைக்கச்செய்யவே முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைத்து நலம் பெற வேண்டும். அதற்கு மருத்துவர்களின் பங்களிப்பு மிக முக்கியம். மருத்துவர்களின் பணி என்பது மக்களின் உயிர் காக்கும் சேவை சமுதாயத்திற்கான மிகப் பெரிய தொண்டு. டாக்டர் இல்லாமல் இந்த திட்டங்கள் இல்லை, மக்கள் உங்களை நம்பி உயிர் காக்கும் பொறுப்பை ஒப்படைத்து உள்ளார்கள். மக்கள் நலனை நீங்கள் கவனியுங்கள், உங்கள் நலனை அரசு கவனிக்கும். உங்கள் நலனைக்காகத்தான் திராவிடம் ஆடல் அரசு இருக்கிறது. உயிர்களை காக்க உங்களுக்கு தேவையான அனைத்தையும் நிச்சியம் செய்வேன் என்று சொல்லி உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்றார்.