”ஒற்றுமையா இருக்கணும்”- ஒன் டூ ஒன் ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் அறிவுரை
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்ட மணப்பாறை,பாபநாசம், பட்டுக்கோட்டை தொகுதி நிர்வாகிகளுடன் உடன்பிறப்பே வா என்னும் பெயரில் ஒன் டூ ஒன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக நிர்வாகிகளுடன் ஒன் டு ஒன் சந்திப்பு நடத்தப்படும் என மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் முதலமைச்சரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் ஜூன் 13ஆம் தேதியிலிருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளை உடன்பிறப்பே வா என்ற பெயரில் ஒன் டூ ஒன் சந்தித்து வருகிறார். முதல் நாள் விழுப்புரம், உசிலம்பட்டி,சிதம்பரம் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
நேற்று வரை 27 சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளை சந்தித்துள்ளார். இன்று மணப்பாறை,பாபநாசம், பட்டுக்கோட்டை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அப்போது தேர்தல் பணிகளில் முரண்பாடு கலைந்து ஒன்று ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் வெற்றி பெறும் வகையிலும், திமுக 200 தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் சந்திப்பின்போது அறிவுறுத்தினார். மேலும் உடன்பிறப்பே வா - ஒன் டூ ஒன் சந்திப்பின்போது, “ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பில் பூத் அளவிலான உறுப்பினர் சேர்க்கை குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.


