" சக நடிகர்கள் மேல அவதூறு பரப்பி இவர் ஜெய்ச்சிடுவாரு" - விஜய் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கோவையில் திராவிடர் கழகம் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மு. க. ஸ்டாலின், "CM சார் சினிமாவில் நடிக்கும்போது ஒரு ஃபார்முலா வச்சிருந்தாரு. அவருடைய ஆன்லைன் விஷமிகள் மூலமா, சக நடிகர்கள் மேல அவதூறு பரப்பி இவர் ஜெய்ச்சிடுவாரு. அதே ரூட்டில் அரசியலில் ஒரு முறை ஜெய்ச்சுட்டாரு. தமிழ்நாட்டு மக்களை 2வது முறை உறுதியாக ஏமாற்ற முடியாது. தலைநகர் தொடங்கி, மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் சர்வசாதாரணமாகக் கொலைகள் அரங்கேறியுள்ளன. தொழில் நகரமாக இருந்த கோவையில், ஒரு மாதத்தில் 10 கொலைகள் அரங்கேறியுள்ளன. மூச்சுக்கு மூச்சு தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்தார்கள். ஆனால், இன்று எப்படியெல்லாம் துர்நாற்றம் வீசுகிறது என்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சி செய்வது Healthy politics இல்லை filthy politics!இளைஞர்களும் இளம் பெண்களும் அதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
தவெக ஆட்சியால் மின்வெட்டுப் பிரச்சினையைச் சரிசெய்ய முடியவில்லை. துணைக் குடியரசுத் தலைவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும்போது மின்வெட்டு ஏற்படுகிறது. கேட்டால், ஜெனரேட்டரில்தான் மின்விநியோகம் செய்கிறோம் எனத் துறை அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். அடுத்த நாளே பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இது என்ன கோமாளித்தனம்? தவெக ஆட்சியில் செயற்கையாக மின்வெட்டு உருவாக்கப்படுவது ஏன்? திமுக ஆட்சியில் குறைந்த விலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, இரண்டு மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். மின்வெட்டு ஒருபுறம் என்றால், மறுபுறம் அறிவாள் வெட்டு வெற்றி நடைபோடுகிறது. வர் சென்டரே இருக்காது என்று விஜய் சொன்னார். ஆனால், இன்று நிலைமை என்ன? முதல்வரை டம்மியாக்கிவிட்டு, அவருக்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் சென்டர்கள்தான் ஆட்சி செய்கின்றன. முதல்வரை வைத்து சர்க்கஸ் ஆட்சி நடத்துகிறார்கள். விஜய் ஆட்சிக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டவர்களே, போதும் என்ற நினைப்புக்கு வந்துவிட்டார்கள். சட்டம்-ஓழுங்கு பற்றி கேள்வி கேட்டால் பையிலை திறப்பேன் என்று சொல்கிறார். ஆனால் பைலை திறக்கவில்லை ஜெயிலை தான் திறந்து விட்டிருக்கிறார். 30 வருட வரலாற்றில் இத்தனை கைதிகள் சிறையில் இருந்து தப்பித்த வரலாறி இந்த கேவலமான ஆட்சியையே சேரும். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் தவெக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. நெல்லை, கடலூர், சேலம் நூலகத் திட்டங்களை ரத்து செய்யாமல், பணிகளை விரைவாக முடித்துத் திறந்து வைக்க வேண்டும். பெரியார் அறிவுலகம் தொடக்கநிலைத் திட்டமாக இருந்திருந்தால், அதற்கு மூடுவிழா நடத்தியிருப்பார்கள். 95% பணிகள் முடிவடைந்திருந்ததால், பேருக்கு ஜோதிடர் சொன்ன தேதியில் பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார்." எனக் கூறினார்.

