பெண்கள் உயர்ந்தால்தான் சமூகம் உயரும்- மு.க.ஸ்டாலின்
கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சைதாப்பேட்டையில் திருந்த வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெண்களின் திறன்களை மேம்படுத்தி வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் கலைஞர் கணினி கல்வியல் பயிற்சி மையம் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கலைஞர் கணினி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, பணி சேர்க்கை ஆணைகளை வழங்கினார். அதன்பின்னர் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் புதிதாக மூன்று தனித்திறன் பயிற்சியை துவக்கி வைத்தார். இத்திறன் மேம்பாட்டு மையத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 2,000 மகளிர்க்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சுயத்தொழிலுக்கு தகுதி படைத்தவர்களாக உருவாக்கப்பட உள்ளனர்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் முகஸ்டாலின், "நான் மிகுந்த ஆச்சரியத்தோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்... என்ன ஆச்சரியம் என்றால் இவ்வளவு அமைதியாக பெண்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்... ஆயிரக்கணக்கில் அமர்ந்து கொண்டிருக்கும் தாய்மார்களிடம் இவ்வளவு அமைதி பார்க்க முடிகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரு இடத்தில் ஒரு மித்த அமைதியாக இருப்பதை நான் இங்கு தான் பார்க்கிறேன். இதுதான் இன்று தாய்க்குலமடைந்திருக்கின்ற வெற்றி.
புத்தாண்டு முடிந்து நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை உருவாக்கிய இயக்கம் தான் நம்முடைய இயக்கம். அதில் பாலின சமத்துவம் முக்கியமான ஒன்று. பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை அண்ணா கலைஞர் காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும் அண்ணா வழியில் கலைஞர் வழியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்கும்.கொளத்தூர் தொகுதியில் அனிதா பெயரில் பெண்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அடி முன்னேறி நிற்க இந்த திட்டம் இருக்கும்." என்றார்.