“செந்தில்பாலாஜி டார்கெட் அமைச்சர்” மு.க.ஸ்டாலின் புகழாரம்

 
 “செந்தில்பாலாஜி டார்கெட் அமைச்சர்” மு.க.ஸ்டாலின் புகழாரம்

கோவை மாவட்டம்- கருமத்தம்பட்டியில் விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் இலவச மின்சாரமும், கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு 200 யூனிட்டில் இருந்து, 300 யூனிட் இலவசம் மின்சாரமும் வழங்கியதற்கு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியின் 30,000 ஆதரவாளர்கள்.. கரூர் விழாவில்  ஸ்டாலின் நெகிழ்ச்சி! | DMK gets new strength because of Senthil Balaji says  M K Stalin - Tamil Oneindia

விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, காந்தி, முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கொங்கு ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, வருவாய் அலுவலர் லீலா அலெக்‌ஷு, விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா நடத்த தேதி வழங்கிட வேண்டும் என செந்தில் பாலாஜி சொன்னார். இதில் நன்றி தெரிவிக்க என்ன இருக்கிறது. கலைஞர் வழியில் என் வேலையை செய்தி இருக்கின்றேன் என சொன்னேன். இன்று மட்டுமல்ல. திமுக தோன்றியது முதல் நெசவாளர் துயர் துடைக்கும் இயக்கம். 1949 ல் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். கைத்தறி ஆடைகள் தேங்கி இருந்தது. கைத்தறி ஆதரவு நாள் என கொண்டாடியது திமுக.

துணியை தோளிலே சுமந்து விற்று கொடுத்த இயக்கம்தான் திமுக. திருச்சி வீதியில் அண்ணா கைத்தறி துணிகளை விற்றார். சென்னை வீதிகளில் கலைஞர் கைத்தறிகளை விற்று கொடுத்தார். தமிழகத்தில் ஓரே நாளில் லட்ச ரூபாய்க்கு அப்போது விற்பனை செய்யப்பட்டது. திட்டமிட்டு செயல்பட கூடியவர் செந்தில் பாலாஜி. அவரை டார்கெட் அமைச்சர் செந்தில்பாலாஜி என்று சொல்வேன். 1.50 லட்சம் இலவச மின்சார இணைப்பு வழங்கியதால் அரசிற்கு மிகப்பெரிய மதிப்பு கிடைத்து இருக்கின்றது

mkstalin

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2.10 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 20 மாதத்தில் 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகளை கொடுத்து இருக்கின்றோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம் என்பதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கைத்தறிக்கும், விசைத்தறிக்கும் மின்கட்டணம் சலுகை வழங்கப்பட்டுள்ளதால், அரசுக்கு 53 கோடி ரூபாயை கூடுதல் செலவீனம் ஆகும். இதன் மூலம் இத்தொழில் புத்துயிர் பெருகின்றது. செலவை விட அந்த மகிழ்ச்சியை பார்க்கின்றேன். விசைத்தறிகளுக்கான கட்டணம் குறைவு என்பதால் விசைத்தறியாளர்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.

5.65 லட்சம் விசைத்தறி தமிழகத்தில இருக்கு. இதில் 10 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். விசைத்தறிக்கு அரசு உதவி வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கின்றனர். இந்த கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கக்பட்டு அதை உறுதியோடு நிறைவேற்றப்படும்.ஜவுளி துறைக்கு ஆணிவேராக இருப்பது நெசவுத்துறை. ஐவுளி பூங்காகளை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மேற்கு மண டலத்தில் ஒரு ஐவுளிபூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ஜவுளி பணிகள் ஒரே இடத்தில் மேற்கொள்ள முடியும். உங்களுக்காக உழைக்கவே முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கின்றேன் ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி மகத்தான வெற்றி. மக்களுக்கான அரசு என்பதால்  இந்த மகத்தான வெற்றியை கொடுத்து இருக்கின்றனர்” என தெரிவித்தார்.