"என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு”- மு.க.ஸ்டாலின்

மக்களுக்கு நல்லது நடந்தால் எதிர்க்கட்சியினருக்கு பிடிக்காது, ஆட்சியின் மீது குறையில்லை சிலரது கண்ணிலும் எண்ணத்திலும்தான் குறை உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் வழுதரெட்டியில் 9 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகள் மற்றும் முன்னாள் மறைந்த அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணி மண்டபத்தினை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், 133 கோடி மதிப்பீட்டில் 116 திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து புதியதாக 425 கோடியில் 231 முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தார். 324 கோடியில் 35,003 பயணாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடந்ர்த்து தொடர்ந்து மேடையில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “விழுப்புரம் மாவட்டத்திற்கு செஞ்சி கோட்டை, பனைமலை பேட்டை, கீழ்வாலை பாறை ஓவியம், பனைமலை பேட்டை, மண்டகப்பட்டு குடைவரை கோவில்கள் போன்ற வரலாற்று சிறப்புகள் நிறைந்துள்ளது. கலைஞரின் ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஜி.கோவிந்தசாமி, 21 சமூகநீதி போராளிகளுக்கு மணி மண்டபம் அமைக்கபடுமென தெரிவித்ததை நிறைவேற்றி உள்ளோம். மக்களுக்கு நல்லது நடந்தால் எதிர்க்கட்சியினருக்கு பிடிக்காது, ஆட்சியின் மீது குறையில்லை சிலரது கண்ணிலும் எண்ணத்திலும்தான் குறை உள்ளது. ஆட்சியில் நிதி ஒன்று தான் தடை வேறு எந்த தடையும் இல்லை.
ஒரு கட்சி அரசியல் பாகுபாடு இல்லாமல் உழைத்தால் போதும், எல்லாமும் எல்லாருக்கும் என்று திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்யாமல் ஸ்டாலின் ஆட்சி நடந்து வருகிறார். ஸ்டாலின் ஆட்சி என்பதை விட இது திராவிட மாடல் ஆட்சி தான் என்று மார்தட்டி கூறுவதுதான் பெருமை. ன்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்” என்றார்.