எதிர்க்கட்சிகளை பாஜக மிரட்டுகிறது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
mkstalin

எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே பாஜக மிரட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mkstalin

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே மிரட்டுகிறது பாஜக என்பதற்கு எடுத்துக்காட்டுதான், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே பாஜக பயன்படுத்துகிறது. இந்த கைது கண்டிக்கதக்கது. பிரமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மணிஷ் சிசோடியா கைது விவகாரத்தில் குற்றவியல் நீதிமுறையின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன. வேறுபட்ட கொள்கைகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும்தான் இந்திய ஜனநாயகத்தின் இதயத் துடிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டியே உங்களில் ஒருவன் தொடரில் ஸ்டாலின் பாஜகவை விமர்சித்துள்ளார்.