“பாஜகவின் சதித்திட்டங்களை திமுக அனுமதிக்காது“ - மு.க.ஸ்டாலின்

திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அண்ணாவையும் கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான். சிறுபான்மையினர் உரிமையை பறிக்க வக்பு மசோதாவை பாஜக கொண்டுவர பார்க்கிறது. மசோதா சட்டமானால் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். பாஜகவின் சதித்திட்டங்கள் நிறைவேற திமுக ஒரு போதும் அனுமதிக்காது. இஸ்லாமியர்களை காக்கும் அரணாக திமுக செயல்பட்டுவருகிறது. இஸ்லாமியர்களின் உரிமைகளை காக்கும் சகோதரர்களாக நாங்கள் செயல்படுகிறோம். இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி அவர்களின் காவல் அரணாக திமுக என்றும் இருக்கும். அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கக்கூடிய அரணாக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அபத்து நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு, குற்ற உணர்ச்சியே இல்லாமல் எடப்பாடி பழனிசாமி இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை இஸ்லாமிய மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். ” என்றார்.