#JUSTIN தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை அதே வேலையில் தொடரலாம்- முதலமைச்சர் முக ஸ்டாலின்

 
mkstalin

127 அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தை உள்ளடக்கிய ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் 'வாழ்வாதார நம்பிக்கை மாநாடு' சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு ஊழியர்கள் மத்தியில் பேசினார். 

Tamil Nadu Chief Minister MK Stalin tests positive for Covid-19- The New  Indian Express

அப்போது பேசிய அவர், “கோட்டைக்கு அருகிலேயே தீவுத்திடலில் உங்கள் மாநாடு நடக்கிறது. உங்களில் ஒருவன் என்ற உணர்வுடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் அரசு ஊழியர், நான் மக்கள் ஊழியன். அரசும், அரசாங்கமும் இரண்டற கலந்தது. திமுக அரசு ஆட்சியை பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் காரணம். அத்தகைய நன்றியுணர்ச்சியுடன் தான் இங்கு வந்துள்ளேன். அதிக எதிர்ப்பார்ப்புடன் அரசு ஊழியர்கள் வந்து உள்ளீர்கள். அதை நிறைவேற்றுவது எனது கடமை. உங்களது நியாயமான கோரிக்களை தேர்தலுக்கு முன்பே என்னிடம் எடுத்து கூறினீர்கள். அதை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

கொரோனா சூழலால் ஏற்பட்ட நிதிநிலைமை சீரான பின்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர்  நிறைவேற்றி தருவதாக உங்களது அழைப்பிதழில் அச்சிட்டு இருக்கிறீர்கள். எனது மனதில் உள்ளதை உணர்ந்து அச்சிட்டு நீங்களே மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டீர்கள். கடந்த ஆட்சியின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காக உங்கள் மீது போடப்பட்ட வழக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கழக ஆட்சி வந்தவுடன் ரத்து செய்து உத்தரவிட்டேன். அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்து விட்டு தான் ஜாக்டோ ஜியோ மாநாட்டிற்கு வந்து இருக்கிறேன்.

தற்காலிக ஆசிரியர்கள் ஆசிரியர்கள் 60 வயது வரை அதே வேலையில் தொடரலாம். அக்டோபர் 15ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும். பள்ளிக்கல்வித்துறையை  சீரமைக்க கொண்டு வரப்பட்ட  அரசாணை 101 குறித்து எழுத்த மாற்று கருத்துகளை ஏற்று சில மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறோம். அரசாணை 101 கீழ் சில உத்தரவுகள் பிறப்பித்து இருக்கிறேன். இதன்படி கூடுதல் அலுவலர்களை நியமித்து தனியார் பள்ளிகளை கண்காணிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல கல்வித்துறையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.