ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி- ஆளுநர் ரவி, மு.க.ஸ்டாலின் இரங்கல்

 
mks

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மிகக் கூட்டத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

Hathras Stampede: உ.பி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு  அறிவிப்பு.. முழு விவரம்!

இந்நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான நெரிசலில் விலைமதிப்பற்ற உயிர்களின் சோகமான இழப்புகளால் ஆழ்ந்த வேதனையில் ஆழ்ந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில்  அதிர்ச்சி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்மீக சத்சங்க நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற எனது பிரார்த்தனைகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.