"குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை"- ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

 
"குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை"- ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில் "குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை"- ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததைவிட இந்த ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


சட்டம் ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்தின் பிடியில் இருந்து யாருமே தப்பவே முடியாது என முதல்வர் பேசிய நேற்றைய தினமே 4 கொலைகள் அரங்கேறியுள்ளது. தமிழ்நாட்டில் கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது” என்றார்.

 யின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அதிமுக ஆட்சியிலே அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளது. 2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன. கொரோனா காலத்தில் லாக் டவுன் இருந்த போதும் அதிக கொலை நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 200-க்கு மேற்ட்ட சத்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.

மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்ய முயற்சி செய்தபோது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பழிவாங்கும் நோக்கத்தில் ஈரோடு சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி, சாத்தான்குளம் பிரச்னையை நீங்கள் மறந்துவிட கூடாது. குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை, நடந்துள்ளது, நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களை போன்று டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என நான் கூறவில்லை"