"எல்லாத்தையும் மாற்றியே ஆக வேண்டும்... உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்”- மு.க.ஸ்டாலின்
உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “எல்லோருக்கும் வணக்கம்... தேர்தல் நடந்து முடிந்து விட்டது. முடிவுகளும் வந்துவிட்டது. அதன்பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதை பார்த்துகொண்டு தான் இருக்கிறோம். 2 வாரங்களாக அனைவரது வீடுகளிலும் நியூஸ் சேனல்தான் ஓடிகொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு பரபரப்பு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. 2026 தேர்தல் முடிவில் திமுக ஒரு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அதனை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நிச்சயமாக இது நாம் எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை. இதுக்கு அவர் காரணம், இவர் காரணம் என யாரும் யார் மேலேயும் பழி போடாதீங்க. ஒரு தலைவராக இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். வெற்றி கிடைக்கும்போது எனக்குதான் அந்த கிரெடிட் வந்து சேருது. அப்ப தோல்வி அடையும்போதும் அந்த பழியை நானே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் ஒரு சிறந்த தலைவருக்கான இலக்கணம். சரி தோற்றுவிட்டோம் அதற்காக அதையே நினைத்துக்கொண்டு முடங்கிவிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன்.
திடீரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ !#DMK #MKStalin pic.twitter.com/mIBtD4Zj6R
— Top Tamil News (@toptamilnews) May 14, 2026
நாம் எல்லோருமே அப்படிதான் வர வேண்டும். அதற்கு உங்கள் ஆலோசனைகள், பரிந்துரைகள், ஐடியாக்கள் எனக்கு வேண்டும். எலெக்ஷனாக இருந்தாலும், கரெக்ஷனாக இருந்தாலும் உங்களிடமே வந்தாகும். மக்கள்தான் எல்லாம். தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம்? திமுக இன்னும் எப்படியெல்லாம் எங்களுக்காக உழைக்க வேண்டும் என்று நினைக்கீறீர்கள் என நீங்கள் சொல்லுங்கள். உங்கள் கருத்துகளை ஓபனாக சொல்லுங்கள்! அதற்காகவே உடன்பிறப்பின் குரல் வெப்சைட். இதில் கருத்துகளை பதிவிடுவது மிகவும் எளிது. உங்கள் வாய்சில் பேசி கருத்துகளை சொன்னால் அதுவே டைப் ஆகிவிடும். பேப்பரில் எழுதி அதனை போட்டோ எடுத்து அதனை டாக்குமெண்டாகவும் அப்லோடு பண்ணலாம். உங்க கருத்துகள் எனக்கு வந்து சேர்ந்துவிடும். அதனையெல்லாம் நான் படித்து பரிசீலித்து நான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை வடிவமைக்கப்போகிறேன். நமது அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு என அனைத்தையும் மாற்றியாக வேண்டும். காலத்திற்கேற்ப மாறிதான் ஆக வேண்டும். உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் திமுக 2.0 வரும். கட்சியில் தேவையான மாற்றங்களை செய்யப்போகிறேன். இதனால் அடுத்த 100 ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்புடன், உங்களுக்காக இயங்கும். உடன்பிறப்பே நீங்க சொல்லுங்க! நான் கேட்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

