டெல்லிக்கு வெள்ளைக்கொடியையோ, காவிக்கொடியையோ எடுத்துச் செல்லவில்லை- மு.க.ஸ்டாலின்
எனது டெல்லி பயணம் குறித்து அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் கொளத்தூர், பழனி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 22.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், “டெல்லிக்கு வெள்ளைக்கொடியையோ, காவிக்கொடியையோ எடுத்துச் செல்லவில்லை. எனது டெல்லி பயணம் குறித்து அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. ஆட்சியைப் பற்றி குறை கூற எதுவும் இல்லாததால் அவதூறு பரப்புகிறார் பழனிச்சாமி.


