“தலைநகரம் நிம்மதியாக உள்ளது; எங்கும் மழைநீர் தேங்கவில்லை”- மு.க.ஸ்டாலின்

 
ச் ச்

சென்னை கொளத்தூரில் செல்வி நகர் மழை நீர் வெளியேற்று நிலையம் சீனிவாச நகர், அரசு மருத்துவமனை, ஜி.கே.எம் காலனி மழைநீர் வெளியேறும் நிலையம் பெரியார் நகர் அரசு மருத்துவமனை பகுதிகளை ஆய்வு செய்தார். 

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைநகரம் தப்பிக்கவும் இல்லை, தத்தளிக்கவும் இல்லை. பெரிய அளவில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. விழுப்புரம், திண்டிவனம், மரக்காணத்தில் 60 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்கு குற்றச்சாட்டு வைப்பது வேலையாக போய்விட்டது, அவரைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை... எங்கள் வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், திண்டிவனம், மயிலம், விழுப்புரம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் மழை அதிகம் பெய்துள்ளது. அங்கு அவ்வளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை. விழுப்புரத்திற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளோம்.


சென்னை உள்பட தமிழ்நாட்டில் மழை நீர் எங்கும் தேங்கவில்லை. ஒரு சில இடங்களில் தேங்கிய நீர் மழை நின்றால் வடிந்துவிடும். வானிலை ஆய்வு மையம் தரும் தகவல் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் பழைய வீடியோவை எடுத்து போட்டு தண்ணீர் தேங்கி இருப்பதாக கூறிவருகின்றன. மக்கள் நிவாரண பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிவருகின்றனர். மக்கள் அனைவரும் திருப்தியாக இருக்கிறார்கள், இது என்னுடைய தொகுதி என்பதால் இதனை நான் கூறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா இடங்களிலும் குறிப்பாக சென்னை மாநகரில் எங்கெல்லாம் உண்டு தண்ணீர் தேங்குமோ அங்கு எல்லாம் தற்பொழுது தண்ணீர் தேங்கவில்லை. மழை பெய்யும் நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கும் அவை மழை நின்ற பிறகு பத்து நிமிடம் 15 நிமிடத்திற்குள் வடிந்துவிட்டது” எனக் கூறினார்.