பாஜகவின் பண பலம் தேர்தலில் எடுபடவில்லை- மு.க.ஸ்டாலின்

 
MKStalin

தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

MKStalin

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40 க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அளவில் மோடி எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.

 

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கனவு பலிக்கவில்லை. பண பலம் தேர்தலில் எடுபடவில்லை. பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உள்ளது என்பதை இந்த தேர்தல் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களவைத் தேர்தலில் 39/39 தொகுதிகளிலும் வெல்வது இதுவே முதல்முறை. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியிலான தாக்குதலை பாஜக கொடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது” என்றார்.