நல்லகண்ணு கவலைக்கிடம்- சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர்
Feb 23, 2026, 22:04 IST1771864493366
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள்ம் தென்னரசு, முடததுசாமி, சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
நல்லகண்ணுவை சந்தித்த பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், “தோழர் நல்லகண்ணுவில் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக போராடியவர், தற்போது இயற்கையுடன் போராடிவருகிறார்” என்றார்.

