டெல்லியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்- மு.க.ஸ்டாலின்

 
டெல்லியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்- மு.க.ஸ்டாலின்

டெல்லி விமான நிலையத்தில், தலைவர் கலைஞர் அவர்களின் நீண்டகால நண்பரான திரு. சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி விமான நிலையத்தில், தலைவர் கலைஞர் அவர்களின் நீண்டகால நண்பரான திரு. சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்தேன். அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என்ற என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்.


திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒன்றிய அரசில் மிக முக்கியப் பங்காற்றுவார் என்றும், அவர் தென்மாநிலங்களுக்காக வாதாடி, நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்றும் உறுதியாக நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.