வெளிநாடு பறக்கும் முதல்வர் மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை
Aug 26, 2024, 15:49 IST1724667595261
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு புறப்பட உள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மூத்த அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு,பொன்முடி,எ.வ வேலு திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருடன் சுமார் 15 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளிநாடு புறப்பட உள்ள நிலையில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது, தொய்வின்றி பணிகள் மேற்கொள்ளவது, குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் முதலமைச்சரை பார்ப்பதற்காக அண்ணா அறிவாலயம் வந்த சென்னை கோயம்பேட்டை சேர்ந்த திமுக தொண்டர் ராஜசேகர் விமலா தம்பதியின் குழந்தைக்கு திராவிடன் என முதலமைச்சர் பெயர் சூட்டினார்.