ஹெச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

 
s s

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Image

இதூதொடர்பாக ஹெச்.ராஜாவின் எக்ஸ் தளத்தில், “தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. M. K. Stalin  அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.T.R.பாலு MP அவர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.H.ராஜா ஜி அவர்களை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். திரு.H.ராஜா ஜி அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.T.R.பாலு MP அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.