துரை தயாநிதியை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

 
mks

வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

மு .க  அழகிரியின்  மகன்  துரை. தயாநிதி  கடந்த மார்ச் மாதம் முதல் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துரை தயாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்  முதலமைச்சர் வருகையை ஒட்டி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.