நடிகை ராஜம் விருப்பத்தை நிறைவேற்ற வீடு தேடி சென்ற மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்க்க வேண்டும் என 90 வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை எம்.என்.ராஜம் ஆசைப்பட்ட நிலையில், அவரது ஆசையை மு.க. ஸ்டாலின் நிறைவேற்றினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு தனது எக்ஸ் தளத்தில், “பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்கள் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அடையாறிலுள்ள பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, பேசினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்கள் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சென்னை,… pic.twitter.com/TdCigQaL6c
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 6, 2025
எம். என். ராஜம் என அழைக்கப்படுபவர் மதுரை நரசிம்மாச்சாரி ராஜம். தென்னிந்திய திரைப்படங்களில் 1950கள் மற்றும் 1960 களில் முன்னணி வேடங்களில் நடித்த இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அரங்கேற்றம் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

