ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தும் தமிழ்நாடு!

 
tn

ஸ்பெயினில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

stalin

2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து 8 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்.  கடந்த 2022-ஆம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின்  பயணத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆயிரத்து 342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த இரண்டு பயணங்கள் மூலமாக, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 7 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

stalin

இந்நிலையில் ஸ்பெயினில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 8 நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

இந்த பயணத்தின்போது, ரோகா (ROCA) மற்றும் கெஸ்டாம்ப், உட்பட சில பெரும் தொழில் நிறுவனங்களுடனும், Invest Spain எனும் முதலீட்டு அமைப்புடனும் நேரடி பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த பயணத்தின் மூலமாக, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து, அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.